பாடசாலை கீதம்
உன்னத கலை வளரும் ஊவாவிலே
உதித்த எங்கள் கலையகமாம்
மண்ணில் நாங்கள் மகிழ்ந்திடவே
கண்ணில் ஒளியாம் கலையகமாம்
நமுனுகுல மழை சாரலிலே
நயமாய் அமைந்த கலையகமாம்
கணவரல்ல தமிழ் வித்யாலயம்
கல்வியில் சிறக்கும் தாயகமாம்
அறிவு கண்ணை திறந்திடவே
அன்புமிக்க ஆசான்கள்
பரிவுடன் எமக்கு படிப்பித்து
பாரினில் வாழ வழி வகுப்பார்
பேதங்கள் எம்மை சேராது
பேதமை எம்மை பிரிக்காது
போதம் நிறைந்த பிள்ளைகளாய்
புவியில் வாழ வைத்து விடும்
கலைகள் செழித்து பெருகிடவே
கண்ணும் கருத்தாய் படித்திடுவோம்
அலைமகள் மலைமகள் கலைமகளாம்
அனைவரும் சேர்ந்து அருள் புரிவார்
வாழிய வாழிய வாழியவே
எங்கள் வித்யாலயம் வாழியவே
வாழ்க வாழ்க வாழ்கவே
எங்கள் வித்யாலயம் வாழ்கவே..!