CANNAVARELLA SCHOOL (+94) 0775954501
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
KANAWERELLA T.V.
KANAWERELLA T.V.
  • Register
  • Login
KANAWERELLA T.V.
KANAWERELLA T.V.
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

வரலாறு

  • வரலாறு
  • கடந்த அதிபர்கள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. வரலாறு மற்றும் மரபுகள்
  4. வரலாறு

வரலாறு

 

 

பாடசாலை வரலாறு.

 

 

 

 

 

 

 

கல்வியின் இலக்குகள் பொதுவான மனித விழுமியங்களை கட்டி எழுப்புகின்றன. அந்த வகையில் மலையகத்தில் எழில் கொஞ்சும் பிரதேசமான ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச பிரிவில் கணவரல்ல பிரதேசத்தில் பது/கணவரல்ல இலக்கம் 03 தமிழ் மகா வித்தியாலயமான எமது பாடசாலை 1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையில் முதலாவது அதிபராக திரு. காசலிங்கம் அவர்கள் தலைமையில் பாடசாலை இயங்கியது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 01 ஒரு ஆசிரியர் மட்டுமே கடமையாற்றியதாக சம்பவ திருட்டு புத்தகம் மூலம் அறியக்கிடைத்தது. ஆரம்ப காலங்களில் ஆரம்பபிரிவு வகுப்புகள் மாத்திரமே கற்பிக்கப்பட்டது. பின்னராக படிப்படியாக வளர்ச்சி அடைந்து தரங்கள் உயர்த்தப்பட்டது.

 

 

ஆரம்ப காலங்களில் இருந்து நோக்கும்போது இடைப்பட்ட காலங்களில் மாணவர் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டது. கட்டிடங்கள் தொடர்பாக நோக்குகையில் ஒரு கட்டிடம் மாத்திரமே இருந்த போதிலும் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பிரதான மண்டப கட்டிடம் அமைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்காக விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும். மாணவர்கள் கணினி அறிவினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறையும் கணினி வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு என்று விளையாட்டு மைதானம் இல்லாத போதிலும் கணவரல்ல பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்ப காலங்களில் நடந்தேறியது. தளபாடங்களைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் தரையில் அமர்ந்து கல்வி கற்று இருந்தாலும் தற்போது மாணவர்களுக்கு தளபாட வசதிகள் ஓரளவுக்கு பூரணப்படுத்தப்பட்டுள்ளது.


மாணவர்களின் மலசல கூட வசதிகள் குறைபாடாக இருந்த போதிலும் தற்போது புதிய மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய விடயமாகும். கல்வி செயற்பாட்டின் ஒரு பகுதியாக கருதப்படும் இணைப்பாடு விதான செயல்பாடுகளில் எமது பாடசாலையானது தேசிய மட்டம் வரை புகழ்பெற்றுள்ளது நாம் என்றும் மறக்க முடியாது. அதற்கு சான்றாக அகில இலங்கை தமிழ் தின போட்டியில் கலந்து கொண்ட செல்வி. சத்தியலோஜினி பெற்றுக்கொண்ட தங்கப்பதக்கத்தை குறிப்பிடலாம். அது மட்டுமன்றி வலய மாகாண மட்டங்களில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்வதினையும் குறிப்பிடலாம்.

மேலும் சாகித்திய விழா போட்டிகளிலும் மாகாண மட்டத்திலான முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றுக் கொண்ட எமது மாணவர்களின் தமது திறமைகளை வெளிக்காட்டுவதிலும் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. கல்வி சுற்றுலாவில் கலந்து தமது கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்திக் கொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது
மேலும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி மாணவர்களின் திறமைகள் வெளிக்கொணர்வதாக அமைந்தது.


பாடசாலையில் தற்போதைய அதிபராக 2021 முதல் தற்போது வரை திரு.J.ஜெயப்பிரகாஷ் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
ஆசிரியர்கள் 23 பேரும் 335 மாணவர்களும் கல்வி பயில்கின்றார்கள். பிரதான மண்டபம்
உட்பட 02 கட்டிடங்களும் கணினி அறையும் விஞ்ஞான ஆய்வு கூடமும் காணப்படுகின்றது. மேலும் ஆரம்ப்பபிரிவு மாணவர்களுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது.

 

 

 

 

KANAWERELLA T.V.

Passara zone

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Bd/Cannavarella 3 T M V -Namunukula

: (+94)0775954501

: (+94)123456123

: [email protected]

Supported By

© 2026 KANAWERELLA T.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk